மக்கள் செல்வனின் திரைப்படத்தில் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுகிறார். தற்போது சிம்பு மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் நதிகளில் நீராடும் சூரியன் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் இயக்குனர் கோகுல் உருவாக்கத்தில் கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது.
ஆனால் இப்போது அவர் நடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி வந்தது. இதனை அடுத்து தற்போது அவருக்கு பதிலாக சிம்பு நடிக்க உள்ளார் என்ற செய்தி கசிந்துள்ளது. மேலும் இப்படத்தின் தொடக்கத்தில் விஜய் சேதுபதியின் குரலில் துவங்க உள்ளதாம். அதிலும் குறிப்பாக சிம்பு மற்றும் விஜய் சேதுபதி செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.