இளம்பெண்ணுடன் எடுத்த புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சீனிவாசன்பேட்டை பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி பருவத்தில் ஒரு இளம் பெண்ணிடம் நட்புடன் பழகி வந்துள்ளார். அப்போது அவர் அந்த பெண்ணுடன் சேர்ந்து செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்.
இதனை அடுத்து ரஞ்சித்தின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அந்த இளம்பெண் அவரிடமிருந்த நட்பை கைவிட்டுள்ளார். அதன்பிறகு ரஞ்சித்குமார் அந்த இளம்பெண்ணுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பெண்ணின் தந்தை ரஞ்சித் குமாரை தட்டி கேட்டுள்ளார்.
அப்போது ரஞ்சித்குமார் ஆத்திரமடைந்து அந்தப் பெண்ணின் தந்தையை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் வேதனை அடைந்த அந்த இளம்பெண் காவல் நிலையத்திற்கு சென்று ரஞ்சித்குமாரின் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரஞ்சித் குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.