தனுசு ராசி அன்பர்களே.! குடும்ப சுமைகள் எல்லாம் குறைந்துவிடும்
இன்று உங்களுக்கு ஏற்றம் என்பது கண்டிப்பாக இருக்கும். இனிமையான வார்த்தைகள் மூலம் அனைவரையும் கவரும் விதமாக பேசுவீர்கள். சாதுரியமான பேச்சால் உங்களுடைய காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும். எதிர்ப்புகள் நீங்கி விடும். பணவரவு சீராக இருக்கும். தொழிலில் புதுமையை புகுத்தி முன்னேற்றம் அடைய கூடிய சூழல் இருக்கும். கௌரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் மற்றவர்கள் மூலம் சிறப்பாக கிடைக்கும். பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும். சொன்ன சொல்லை நிறைவேற்றி கொடுப்பீர்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் பேச வேண்டும். எதார்த்தமாக பேசுவீர்கள். குடும்ப சுமைகள் எல்லாம் குறைந்துவிடும். பிரச்சினையை கண்டு பயப்படாமல் அதனை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.
காதலில் உள்ளவர்களின் நிலைபாடுகள் சந்தோஷத்தை கொடுக்கும். மனதில் எந்தவித சந்தேகமும் குழப்பமும் இல்லாமல் நிம்மதியாக இருப்பீர்கள். கண்டிப்பாக காதல் கைகூடி திருமணத்தில் முடியக்கூடிய சூழல் இருக்கின்றது. மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை இருக்கும். கல்வியின் செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். மாணவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பெற்றோர் சொல்லுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது வெளிர் ப்ரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் பிரவுன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டையும் முருகன் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் பிரவுன் மற்றும் நீலம்