Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: மீண்டும் அடுத்த தடை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்து நடத்த தடைவிதித்து அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மொய் விருந்துக்கு தடை விதிக்கப்படுகிறது. அரசின் விதிமுறைகளுக்கு மாறாக விழாக்களை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |