லண்டன் வானிலை ஆய்வு மையம் இங்கிலாந்து உட்பட பல பகுதிகளுக்கு கன மழையினால் ஏற்படும் வெள்ளம் தொடர்பாக மஞ்சள் எச்சரிக்கையை விடுத்ததோடு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பல முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
லண்டன் வானிலை ஆய்வு மையம் இங்கிலாந்து உட்பட பல பகுதிகளுக்கு கன மழையினால் ஏற்படும் வெள்ளம் தொடர்பாக மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக லண்டன் வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இங்கிலாந்திலுள்ள பல இடங்களில் இடியுடன் கூடிய கன மழையினால் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
மேலும் இவ்வாறு பெய்யும் கன மழையினால் அல்லது பலத்த சூறை காற்றினால் கட்டிடங்கள் சேதமடைவதற்கும், போக்குவரத்து சேவைகள் முடங்குவதற்கும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கனமழையால் மின்சார சேவையும், பல முக்கிய சேவையும் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே சில பகுதிகளில் 50 மில்லி மீட்டருக்கும் கூடுதலாகவே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.