சீனாவிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு கடனாக கொடுக்கப்பட்ட பெண் ராட்சத பாண்டா தற்போது ட்வின்ஸ் குட்டிகளை பெற்றெடுத்துள்ளது.
சீன நாட்டின் தேசிய சின்னமாக கருதப்படும் அதிகாரமற்ற பாண்டா கரடிகளை வணிக அடிப்படையில் அனைத்து நாடுகளுக்கும் கடனாக வழங்கி வருகிறது. அதன்படி பிரான்ஸ் நாட்டிற்கும் Huan Huan என்னும் பெண் கரடியையும், Yuan Z என்னும் ஆண் கரடியையும் 10 வருடங்களுக்கு சீனா கடனாக கொடுத்துள்ளது.
இந்நிலையில் Huan Huan என்னும் அந்த பெண் கரடி பிரான்ஸிலுள்ள பியூவல் மிருகக்காட்சிசாலையில் தற்போது ரெட்டை குட்டிகளை பெற்றெடுத்துள்ளது. இதில் ஒன்று 149 கிராமும், மற்றொன்று 129 கிராம் எடையையும் கொண்டுள்ளதாக மிருகக்காட்சி சாலையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் 100 நாட்களுக்கு இந்த ரெட்டை குட்டிகளுக்கு பெயர் வைக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.