Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? வேகமாக பரவி வரும் கொரோனா…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

கொரோனவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 7 ஆவது இடத்திலிருக்கும் துருக்கியில் ஒரே நாளில் சுமார் 22,898 நபர்களுக்கு தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் துருக்கி 7 ஆவது இடத்திலுள்ளது. இந்நிலையில் ஒரேநாளில் துருக்கியில் சுமார் 22,898 நபர்களுக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து 2,53,468 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த தகவலை துருக்கியின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |