விதவை சான்றிதழ் ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை இதில் காண்போம்
தேவையான ஆவணங்கள்:
விண்ணப்பதாரரின் புகைப்படம்
இறுப்பிடச் சான்றிதழ்
திருமணப் பதிவு சான்று
கணவன் இறப்புச் சான்று
விண்ணப்பிக்கும் முறை:
முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் ஆப்சன் மூலம் உள்நுழையவேண்டும். லாகின் செய்த பின்னர் Department Wise → Service Wise Option-ஐ கிளிக் செய்து Widow Certificate என்ற Option-ஐ தேர்ந்தெடுக்கவேண்டும். அதன் பின்னர் Proceed பட்டணை கிளிக் செய்யவேண்டும்.
பின்னர் உங்களுக்கான CAN எண்ணை உருவாக்கவேண்டும். இதனை ரிஜிஸ்டர் செய்யும்போது உங்களின் விவரங்களை நன்கு படித்து பின்னர் ரிஜிஸ்டர் செய்யவேண்டும். அப்போது உங்களுக்கான எண் உருவாக்கப்படும்.
பின்னர் List of Documents பகுதியில் கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றவேண்டும். இதை அடுத்து Self Declaration Form வரும். அதனை பதிவிறக்கம் செய்து, பின்னர் ஒப்பிட்டு மீண்டும் ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.
பின்னர் சான்றிதழுக்கான ரூ.60 கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். உங்களது ஆவணங்கள் அதிகாரிகளால் சரிப்பார்க்கப்பட்ட பின்னர் உங்களது தொலைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வரும். பின்னர் இதே இணையதளத்தில், தற்போது உருவாக்கப்பட்ட லாகின் ஐடி, பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழைவதன் மூலம் உங்களது சான்றிதழை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.