நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் இந்தமாதம் ஏன் இருக்கும் என்றும் அக்டோபர் மாதம் உச்சம் தொடும் என்றும் ஹைதராபாத் மற்றும் கான்பூர் ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மூன்றாவது அலையில் தினசரி பாதிப்பு ஒரு லட்சம் தொடும். மூன்றாவது அலை உச்சம் தொடும் போது தினசரி பாதிப்பு 1.5 லட்சமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.