Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.10,000 பென்சன்…. கணவன் – மனைவி இருவருக்குமே பென்சன்…. அருமையான திட்டம்….!!!

அமைப்புசாரா துறையை சார்ந்த ஊழியர்களுக்காக மத்திய அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வரும் பென்சன் திட்டம் தான் அடல் பென்சன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 5 ஆயிரம் வரையில் மாதாந்திர பென்ஷன் கிடைக்கும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள எந்த ஒரு இந்திய குடிமகனும் இந்தத் திட்டத்தில் இணைந்து பயன்பெற முடியும். இதில் பென்ஷன் பெறுவதற்கு 60 வயது வரை குறைந்த பட்சம் இருபது ஆண்டுகளாவது பங்களிப்பு செய்ய வேண்டும்.

இந்தத் திட்டத்தின் முதிர்வு காலத்திற்கு முன்னரே பணம் எடுக்கவோ அல்லது கணக்கை மூட முடியாது. இறப்பு போன்ற சூழலில் மட்டுமே கணக்கை மூட முடியும். இந்தத் திட்டத்தில் எவ்வளவு விரைவாக இணைந்து பங்களிப்பு செய்கிறோமோ அவ்வளவு அதிகமாக பென்ஷன் தொகையும் கிடைக்கும். ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். கணவன் மனைவி இருவருமே தனித்தனியாக இந்தத் திட்டத்தில் இணைந்து பென்ஷன் வாங்க முடியும். இருவருக்குமே அதிகபட்சமாக தலா 5 ஆயிரம் ரூபாய் என்ற விதத்தில் மொத்தம் 10,000 ரூபாய் பென்ஷன் கடைசி காலத்தில் கிடைக்கும்.

இதில் பென்சன் வாங்குவதற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது 210 ரூபாய் பங்களிப்பு வழங்கினால் போதும். 60 வயது வரை இந்த தொகையை தொடர்ச்சியாக செலுத்தி வந்தால் 5 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெற முடியும். ஒருவேளை கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் 30 வயது ஆகி இருந்தால் இந்தத் திட்டத்தில் இணைந்து ஒவ்வொரு மாதமும் தலா 577 டெபாசிட் செய்ய வேண்டும். மாதாந்திர பென்ஷன் மட்டுமல்லாமல், இந்த திட்டத்தில் இணைந்த ஒருவர் இறந்து விட்டால் ரூ.8.5 லட்சம் காப்பீடு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் கடைசிவரை இருவருக்கும் மாதம்தோறும் பென்ஷன் கிடைக்கும்.

Categories

Tech |