சத்துமாவு
தேவையான பொருட்கள் :
தோலுடன் கூடிய உளுந்து – 1/4 கப்
தோலுடன் கூடிய பாசிப்பருப்பு – 1/4 கப்
தோல் நீக்கிய பாசிப்பருப்பு – 1/4 கப்
உடைத்த கோதுமை – 1/4 கப்
பொட்டுக்கடலை – 1/4 கப்
பார்லி – 2 டேபிள் ஸ்பூன்
கொள்ளு – 2 டேபிள் ஸ்பூன்
பாதாம் – 1/4 கப்
முந்திரி – 20
பிஸ்தா -20
ஏலக்காய் – 4
சிவப்பு அரிசி – 1/2 கப்
செய்முறை :
முதலில் அனைத்து பொருட்களையும் நன்கு அலசி , காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . பின் ஒரு கடாயில் தனித்தனியாக இவைகளை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும் . ஆறியதும் நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து , சலித்து எடுத்தால் சுவையான சத்துமாவு தயார் !!!