Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நீ எப்படி விரும்பலாம் …. சிறுவனின் கொடூர செயல்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சிறுவன் பெயிண்டரின் தலையை வெட்டிக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டாலின் நகர் பகுதியில் பொய்யாமொழி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பெயிண்டரான மதன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த மாதம் மதன்குமார் அப்பகுதியில் உள்ள குளத்தின் கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் 17 வயதுடைய சிறுவன் பெயிண்டரான மதன் குமாரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்து நடத்திய விசாரணையில் மதன்குமாருடன் அந்த சிறுவனும் பெயிண்டர் வேலையில் ஈடுபட்டு தெரியவந்துள்ளது. இதனால் மதன்குமார், அந்த சிறுவன் இரண்டு பேரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.

இதனையடுத்து அந்த சிறுவன் காதலித்த பெண்ணை மதன்குமாரும் விரும்பியது தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த சிறுவன் மதன் குமாரை கொலை செய்ய வேண்டும் என்று நினைத்து முன்கூட்டியே குளத்தின் கரையில் உள்ள முட்புதரில் அரிவாளை மறைத்து வைத்துள்ளார். இந்நிலையில் சிறுவன் மதன்குமாரை மது குடிப்பதற்காக அழைத்துச் சென்று அவர் போதையில் இருக்கும்போது தன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரின் கழுத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அதனை அங்கு இருந்த குளத்தில் தூக்கி வீசி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்கும் வகையில் மதன்குமாரின் தந்தையான பொய்யாமொழியுடன் இணைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மதன் குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துவிட்டனர்.

Categories

Tech |