பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான கிரோசிதந்தி என்ற பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஒரு வீட்டில் டைல்ஸ் போடும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அதன்பின் அவரை அக்கம்பக்கத்தினர் கைப்பற்றி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதில் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரின் மரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.