Categories
உலக செய்திகள்

வெறும் 5 நிமிடத்தில் வங்கி கணக்கு…. அமீரகத்தில் வெளியாகியுள்ள புதிய வசதி…. செய்தியின் மூலம் வெளிவந்த தகவல்….!!

அமீரகத்திலுள்ள அபுதாபி இஸ்லாமிய வங்கி வெறும் 5 நிமிடத்தில் பொதுமக்களின் வங்கி கணக்கை தொடங்கும் வசதியை அந்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது.

அமீரகத்தில் அபுதாபி இஸ்லாமிய வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கி அமீரகத்திலுள்ள உள்துறை அமைச்சகத்திலிருக்கும் முகத்தை சரிபார்க்கும் வசதியை பயன்படுத்தி அந்நாட்டிலுள்ள பொதுமக்கள் வங்கிக்கு வராமலேயே தங்களது வங்கி கணக்கை தொடங்கிக் கொள்வதற்கு ஏற்றவாறு ஒரு சிறந்த வசதியை அந்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது.

இவ்வாறு பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே வங்கியில் தன்னுடைய புத்தக கணக்கை தொடங்க வேண்டுமெனில் இதுதொடர்பான செயலியை பொதுமக்கள் தங்களுடைய ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் பொது மக்கள் வெறும் 5 நிமிடத்தில் தங்களது புத்தக கணக்கை வங்கியில் தொடங்கி கொள்ளலாம். இந்த தகவலை அபுதாபி இஸ்லாமிய வங்கி செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |