உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் உகான் நகரில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து வைரஸ் ஆனது உருமாறி பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் உருமாறிய வைரஸான டெல்டா வகை பாதிப்பு சீனாவில் 18 மாகாணங்களில் காணப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த 10 நாட்களில் 27 நகரங்களில் 355 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெய்ஜிங், ஜியாங்சு, சிச்சுவான் போன்ற நகரங்கள் அடங்கும். இந்த உருமாறிய கொரோனா வைரஸானது 95 பகுதிகளில் ஆபத்து நிறைந்ததாக உள்ளது.
இதனை அடுத்து நேற்று மட்டும் 55 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸை சீனாவில் நான்ஜிங்க் நகரில் உள்ள லுகோவ் சர்வதேச விமான நிலையத்தில் தூய்மை பணியாளர்களிடம் முதலில் கண்டறியப்பட்ட்டுள்ளது. அதன் பின்னர் ஹூனான் மாகாணத்தில் உள்ள சாங்ஜியாஜி சுற்றுலா தளங்கள் மற்றும் பிற இடங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் சாங்ஜியாஜி பகுதியில் சுற்றுலா தளமானது மூடப்பட்டது. இந்த நிலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே குடும்பத்திலுள்ள மூவருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் சமீபத்தில் சாங்ஜியாஜி சுற்றுலா தளத்திற்கு சென்று வந்ததாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள பகுதியி இருந்து வரும் வாகனங்கள், விமானங்கள், ரயில்களுக்கு பெய்ஜிங்கிற்குள் வர தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு மக்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக சீனாவில் கடந்த வெள்ளிக்கிழமை வரை உருமாறிய வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 93,103 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1091 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 4636 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளது.