சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் மணிகண்டன் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அறந்தாங்கி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சோதனையின் போது லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த மணிகண்டனை காவல்துறையினர் மடக்கிப்பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.