தேங்காய் பால் சொதி
தேவையான பொருட்கள் :
கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
இஞ்சி – சிறிய துண்டு
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
வேகவைக்க :
கேரட் – 1
பீன்ஸ் -10
முருங்கைக்காய் – 1
உருளைக்கிழங்கு – 1
பச்சை பட்டாணி – 1/2 கப்
பாசிப்பருப்பு – 1/4 கப்
தாளிக்க :
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/4 ஸ்பூன்
பட்டை – 1
பிரியாணி இலை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
சின்னவெங்காயம் – 5
பூண்டு – 2 பற்கள்
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் வேகவைக்க கொடுத்த காய்கறிகளை போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பை 3 விசில் விட்டு குக்கரில் போட்டு வேகவைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு , வேக வைத்த காய்கறி , உப்பு மற்றும் பருப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விடவேண்டும் .பின் இதனுடன் தேங்காய் பால் சேர்த்து இறக்கி இஞ்சி சாறு , எலுமிச்சை சாறு மற்றும் மல்லி இலை சேர்த்து கலந்தால் சுவையான தேங்காய் பால் சொதி தயார் !!!