அடுத்த வாரம் ஜிம்பாப்வே நாட்டில் அதிபருக்கான தேர்தல் நடைபெறவிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அரசியல் வன்முறைகளை தடுக்கும் வகையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் ஜிம்பாப்வே நாட்டில் அதிபருக்கான தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அரசியல் வன்முறைகளை தடுக்கும் வகையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று முக்கிய எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் சிலர் ஆளும் தேசபக்தி முன்னணி கட்சியின் ஆதரவாளர்கள் இருவரை வெட்டிக் கொலை செய்ததாக பரபரப்பு தகவல் வெளியானது.
இதையடுத்து காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் ஜனாதிபதி எட்கர் லுங்கு அரசியல் வன்முறைகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் சூழலில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக விமானப்படை, ராணுவம் ஆகியவை காவல் துறையினருக்கு உதவியாக இருக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.