நடிகை சாய் பல்லவி தனது தாத்தாவின் 85-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
மலையாள திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படத்தில் இவர் மலர் டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்திருந்தார். இதன்பின் நடிகை சாய்பல்லவி தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
. @Sai_Pallavi92 New Pics In Family Function..🥺❤😘#SaiPallavi pic.twitter.com/RDkL7EcU08
— Sai Pallavi FC™ (@SaipallaviFC) August 2, 2021
தற்போது இவர் ஷ்யாம் ஷிங்க ராய், லவ் ஸ்டோரி, விராட பருவம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தனது தாத்தாவின் 85-வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனது தாத்தா, பாட்டி, சகோதரி ஆகியோருடன் இணைந்து சாய்பல்லவி எடுத்துக்கொண்ட இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.