சீனா வுகான் நகரின் ஆய்வகத்தில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் தோன்றியது என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்க குடியரசு கட்சி தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் ஏராளமான பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே உலகம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19.95 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க குடியரசு கட்சியின் தலைவர் வெளியுறவு குழு பிரதிநிதி கொரோனா குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சீனா வுகான் நகரின் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவ வில்லை என்றும் வைரஸ் தொற்று வுகான் நகரின் ஆய்வுகூடத்தில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த ஆய்வுக்கூடத்தில் மனிதருக்கு பாதிப்பு விளைவிக்கும் வைரஸ் உருவாக்கும் பணிகளும் நடந்துள்ளதாகவும் அதற்கு ஆதாரங்கள் நிறைய கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஆய்வக கூடத்தை பராமரிக்க 11 கோடி ரூபாய் கேட்டு ஆய்வக நிர்வாகம் சீன அரசிடம் விண்ணப்பித்துள்ளது என்றும் ஆய்வகம் உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் ஆபத்து நிறைந்த கழிவுகளை கையாளும் வசதிகள் தேவைப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.