Categories
உலக செய்திகள்

கனடாவிற்கு வந்த அமெரிக்கர்கள் இருவருக்கு அபராதம்.. பொய்யான ஆதாரங்கள் மாட்டியது..!!

அமெரிக்க நாட்டை சேர்ந்த இருவர் பொய்யான ஆவணங்களைக் காட்டி கனடா நாட்டிற்குள் புகுந்ததால் 20 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டிலிருந்து ரொறன்ரோவிற்கு பயணம் மேற்கொண்ட இரண்டு நபர்களிடம் கனடா நாட்டிற்குள் நுழைவதற்கு தேவையான ஆவணங்கள் இல்லாததால் கனடாவின் பொது சுகாதார நிறுவனம் 20 ஆயிரம் டாலர் அபராதம் விதித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. மேலும் அவர்கள் இருவரும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ், பயணத்திற்கு முன்பு மேற்கொண்ட சோதனைகள் போன்றவற்றில் பொய்யான ஆதாரங்களை அளித்துள்ளார்கள்.

மேலும் கனடா வந்தபின் சோதனை மேற்கொள்வதற்கும், அரசாங்கம் அனுமதித்த ஹோட்டலில் தங்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். எனவே இவர்களுக்கு 19,720 டாலர்கள் அபராதம் விதித்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த மாதம் 18ஆம் தேதியன்று ரொறன்ரோ நகருக்கு வந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கனடாவின் பொது சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து நாட்டிற்குள் நுழைந்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

Categories

Tech |