Categories
அரசியல் மாநில செய்திகள்

“சூரியன் மேற்கே உதித்தால் திமுக ஆட்சியமைக்கும்”… அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்.!!

சூரியன் மேற்கே உதித்தால் தான் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் நக்கலாக பேசியுள்ளார்.   

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக மீண்டும் ஆட்சியமைப்பது சிம்ம சொப்பனம்தான். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால் தான் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நக்கலாக பேசினார். யார் உற்றவர், யார் அற்றவர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் கூறினார்.

Image result for ஜெயக்குமார் நக்கல்

மேலும் விக்கிரவாண்டி நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.  தமிழை ஆழ்ந்து கற்றவர்கள் அரசு பணிக்கு வரவேண்டும் என்பதற்காகவே குரூப்-2 தேர்வில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |