அரசு அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயத்தை வருவாய்த்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொருவளூர் மலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அனுமதியின்றி இயேசு நாதர் சிலையும் 2 இடங்களில் சிறியதாக கிறிஸ்துவ ஆலயங்களும் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் கிறிஸ்துவ ஆலயம் அகற்றப்படாததால் இம்மாவட்டத்தில் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் வருவாய்த்துறையினர் அப்பகுதியில் அமைந்திருக்கும் இயேசு நாதர் சிலை மற்றும் தேவாலயங்களை அகற்ற முடிவு செய்துள்ளனர்.
அதன்பின் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயத்தை பொக்லைன் எயந்திரம் மூலமாக இடித்து அகற்றும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த 50-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் ஆலயத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பணிகளை தடுக்க முயற்சி செய்த 50 கிறிஸ்துவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.