Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அதிபருக்கு நேர்ந்த கொடூரம்” மர்ம நபர்களின் சரமாரியான தாக்குதல்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

முன்விரோதம் காரணமாக அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் பகுதியில் மதி என்கிற மதிவாணன் வசித்து வந்துள்ளார் இவர் நிதிநிறுவன அதிபராக இருந்துள்ளார். மேலும் இவர் சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார். இந்நிலையில் மதிவாணனுக்கு சொந்தமான இ-சேவை மையம் கிருஷ்ணபாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இதனையடுத்து மதிவாணன் இ-சேவை மையத்தில் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் மதிவாணனை அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த மதிவாணன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மதிவாணனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மதிவாணனை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |