ஒய்வு பெற்ற பல் மருத்துவரை கொன்ற நபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் 82 வயதான ஓய்வுபெற்ற பல் மருத்துவர் Thomas Aye வசித்து வருகிறார். இதனை அடுத்து கடந்த 27ம் தேதி அன்று அவரின் மகள் காலை சுமார் 7 மணியளவில் காணச் சென்றபோது Thomas இறந்து கிடந்துள்ளார். இது குறித்து உடனே அவரின் மகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பல் மருத்தவரின் மகனான Scott Sterffy என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ” நான் எனது தந்தையை கொல்லவில்லை. நான் எந்த குற்ற சம்பவங்களிலும் ஈடுபடவில்லை” என வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் Scott கொலை நடந்த இடத்தில் இருந்ததாகவும் அதே குடியிருப்பில் வசித்து வந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைக்கான காரணம் குறித்த உண்மையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.