Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

யார் இப்படி பண்ணி இருப்பா… எதற்காக பண்ணியிருப்பாங்க… பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை…!!

காட்டில் பெண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொழுந்துராம்பட்டு பகுதியில் இருக்கும் காட்டில் பெண் ஓருவரின் சடலம் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சடலமாகக் காட்டில் உடல் கருகிய கிடந்தவர் யார் என்றும் , அவர் கொலை செய்யப்பட்டாரா எனவும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணையில் எரிந்து கிடந்த பெண் அத்திப்பாக்கம் கிராமத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மனைவி பார்வதி என்பது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இவர் 20 வருடங்களுக்கு முன்பாக கணவனை இழந்துள்ளார். அதன் பின் தனது இளைய மகனான சங்கருடன் வசித்து வந்த பார்வதி அவருடன் கோபித்துக் கொண்டு தனியாக வசித்து வந்துள்ளார். பின்னர் பென்ஷன் பணம் வாங்குவதற்காக சென்ற பார்வதி வீடு திரும்பவில்லை என அவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் பார்வதியை பணம் மற்றும் நகைக்காக யாரேனும் கொலை செய்துள்ளாரா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |