அரசு பேருந்து தடுப்பு சுவரின் மீது மோதிய விபத்தில் பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர் ஓட்டி சென்ற பேருந்து மாதவரம் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென தடுப்பு சுவரின் மீது பலமாக மோதி விட்டது.
இதனால் பேருந்தில் இருந்த நாகராஜ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 8 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.