வாலிபரை வெட்டிக் கொலை செய்த நான்கு குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் சரவணன் என்பவர் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் சரவணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக சரவணன் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அதாவது சரவணனுக்கும், மணிகண்டன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த சரவணன் மணிகண்டனை தாக்கியுள்ளார். இதற்கு பழிவாங்கும் நோக்கத்தோடு மணிகண்டன் தனது நண்பர்களான விஜய், அஜித், ஷாம் போன்றோருடன் இணைந்து சரவணனை வெட்டி கொலை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.