Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டின் மேற்கூரையை பிரித்து…. அத்துமீறி நுழைந்த மர்ம நபர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வீட்டின் மேற்கூரையை பிரித்து மர்ம நபர் பணம் மற்றும் செல்போனை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் லாரி டிரைவரான லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் லட்சுமணனின் வீட்டு மேற்கூரையை பிரித்து மர்மநபர் ஒருவர் உள்ளே புகுந்துள்ளார். அதன் பிறகு வீட்டில் இருந்த ஐந்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் போன்றவை திருடிவிட்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த லட்சுமணன் மேற்கூரை பிரித்து மர்ம நபர் திருடி  சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து லட்சுமணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போன் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |