தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா என்பவர் செவ்வாய் பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்கு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் சென்ற வழியில் 17 வயதுடைய சிறுவன் கையில் குட்கா பாக்கெட்டை வைத்திருப்பதை பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சிறுவனிடம் விசாரித்த போது அவர் அப்பகுதியில் சுரேஷ் குமார் என்பவர் கடையில் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினர் சுரேஷ்குமாரின் கடைக்குச் சென்று சோதனை செய்தபோது அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா விற்பனைக்கு வைத்திருப்பதை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சுரேஷ்குமாரிடம் நடத்திய விசாரணையில் கார்த்தி, அர்ஜுன் சிங், சேதுராமன் ஆகியோருடன் இணைந்து வெளிமாநிலங்களிலிருந்து குட்கா பொருட்களை கடத்திச் சென்று விற்பனை செய்ததும், அதனை அப்பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல்துறையினர் சுரேஷ்குமார் கூறிய குடோனிருக்கு சென்று விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களான குட்காவை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா என்பவரிடம் கார்த்திக், சேதுராமன், சுரேஷ்குமார் மற்றும் அர்ஜுன் சிங் ஆகியோர் இணைந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் 4 பேரும் ஜாமீனில் வெளியே சென்றால் தொடர்ந்து இதுபோன்று மனித உயிருக்கு கேடு தரும் குட்கா பொருட்களை விற்பனை செய்வார்கள் என்பதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர். அந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட கமிஷனர் நஜ்மல் ஹோடா என்பவர் அவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் கார்த்திக், சேதுராமன், சுரேஷ்குமார் மற்றும் அர்ஜுன் சிங் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்து விட்டனர்.