எதிர்க்கட்சி தலைவர் என நிரூபிப்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்கிறாரா மு.க.ஸ்டாலின்? என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, நேர்மையான வழியில்தான் மாணவர்கள் செல்ல வேண்டும். நீட் என்பது கல்வி சார்ந்த விஷயம் எனவே படித்து முன்னேற வேண்டும், குறுக்கு வழியில் செல்ல கூடாது, ரயில்வே துறை இந்தியாவின் முதுகெலும்பு என்று கூறினார்.
மேலும் மக்கள், ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ரயில்வேயை தனியார் மயமாக்கினால் வரவேற்கலாம் என்றும், அதை தனியார் துறைக்கு கொண்டு சென்றால் பயன் தரக்கூடியதாக இருக்கும் என்றும் கூறினார். என்ன மொழியை கற்க வேண்டும் என ஒவ்வொரு தனி மனிதனும் தான் முடிவு செய்ய வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் என நிரூபிப்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்கிறாரா மு.க.ஸ்டாலின்? என்று அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்..