Categories
மாநில செய்திகள்

Alert: ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும்…. திடீர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோவை, சேலம், திண்டுக்கல், தேனி, தென்காசி, கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

Categories

Tech |