குதிரை கருணைகொலை செய்யப்பட்ட சோகத்தினால் பந்தய வீரர் சமூக வலைதளங்களில் இருந்து விலகியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குதிரைகள் தடை தாண்டி ஓடும் போட்டியும் முக்கியமானதாகும். இந்த பந்தயத்தில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த Robin Godel என்பவர் தனது Jet Set குதிரையுடன் போட்டியில் கலந்து கொண்டார். இதனையடுத்து தடைகளை தாண்டி ஓடிய போது குதிரையின் கால்கள் திடீரென அடிபட்டு நின்றுபோனது. இதனை தொடர்ந்து பின்னால் வேகமாக வந்தவர்களும் குதிரையுடன் நின்றுவிட்டனர். இதன் பின்பு மருத்துவ குழு விரைந்து வந்து ஜெட் சட்டை பரிசோதனைக்கு உட்படுத்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் குதிரையின் கால்களில் தசைநார்கள் கிழிந்து இருப்பதாக தெரிய வந்தது. மேலும் இதனைகுணப்படுத்த இயலாது என்று மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளனர். எனவே குதிரையை வேறு வழியின்றி கருணை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் குதிரையின் உரிமையாளர் மற்றும் Robin Godel ஆகியோரின் அனுமதியுடன் கருணை கொலை செய்யப்பட்டது. இவ்வாறு குதிரை இறந்துவிட்ட சோகத்தின் காரணமாக Robin Godel சமூக வலைதளங்களில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.