Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆஸ்பத்திரி போறதுக்குள்ள இப்படி ஆகிட்டு… தொழிலாளிக்கு ஏற்பட்ட கதி… தீவிர விசாரணை நடத்தும் போலீசார்…!!

ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கட்டிட தொழிலாளி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள சின்ன பாளையரேந்தல் பகுதியில் முத்துமணி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி தற்போது ஊரிலேயே கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துமணி வேலையை முடித்து விட்டு ராமநாதபுரத்தில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது திருப்புல்லாணி கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற போது அப்பகுதி வழியாக வந்த வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைத்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே துரதிஷ்டவசமாக முத்துமணி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் முத்துமணி உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தியது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |