ஏசி எந்திரத்தில் காப்பர் வயர்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏசி எந்திரங்களின் பின்னாலுள்ள காப்பர் வயரை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதேபோன்று வணிக வளாகத்தின் எதிரே உள்ள கண்டதேவி சொர்ணலிங்கம் என்பவரின் பழைய இரும்பு கடையில் வைத்திருந்த காப்பர் வயர்களை மர்மனப்வர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த காப்பர் வயரின் மொத்த மதிப்பு ரூ. 15 ஆயிரம் ஆகும். இதுகுறித்து வணிக வளாகத்தில் வேலை செய்யும் தொழிலாளிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காப்பர் வயர்களை திருடி சென்ற மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.