Categories
சினிமா தமிழ் சினிமா

செல்ல மகனுக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்… வைரலாகும் அழகிய புகைப்படம்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு குகன் தாஸ் என பெயர் சூட்டியுள்ளார் .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர், அயலான் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் .

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது செல்ல மகனுக்கு முத்தம் கொடுக்கும் அழகிய புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் ‘எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் அன்போடும் ஆசியோடும் ‘குகன் தாஸ்’ என பெயர் சூட்டியிருக்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |