டோக்கியோ ஒலிம்பிக் பேட்மின்டண் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பி.வி.சிந்து இன்று நாடு திரும்பியுள்ளார் .
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டண் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து
வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்நிலையில் டோக்கியோவில் இருந்து இன்று நாடு திரும்பிய பி.வி.சிந்துவுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன் மூலம் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.இதற்கு முன்னதாக மல்யுத்த வீரர் சுஷீல் குமாா் கடந்த 2008-ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் ,2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்படத்தக்கது .