Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“சென்னை வருவது எனக்கு எப்போதும் பிடிக்கும்”… பிரதமர் மோடி.!!

எனக்கு சென்னை வருவது எப்போதும் பிடிக்கும் என்று பிரதமர் மோடி சென்னை விமானநிலையத்தில் பேசினார். 

ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தார்.  பிரதமர் மோடிக்கு  ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்  உட்பட அமைச்சர்கள் ரோஜாப்பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.  பாஜகவின் சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்- ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உட்பட பலர் வரவேற்றனர்.

Seithi Solai

அதை தொடர்ந்து விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். சென்னை வந்ததும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு சென்னை வருவது எப்போதும் பிடிக்கும். எனக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பான வரவேற்புக்கு நன்றி மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக சென்னை வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. நான் அமெரிக்கா சென்று வந்திருக்கிறேன். அமெரிக்காவில் மிக பழமையான மொழி தமிழ் என நான் பேசினேன். அதுதான் ஊடகங்களில்  பேசப்படுகிறது. நான் அமெரிக்காவிலே பார்த்த விஷயம் என்னவென்றால் நம் நாடு மீது அவர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு  இருக்கிறது.

மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் நிறுத்துங்கள், பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என நான் கூறவில்லை, ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் தான் பயன்படுத்திய நிறுத்த கூறினேன் என்றும், சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் அவர் பேசினார். காந்திஜி அவர்களுடைய 150-வது  பிறந்தநாள் விழாவையொட்ட  அனைவரும் பாத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம்.   அந்த பாதையாத்திரை மூலமாக சித்தாந்தங்களை மக்களிடம் தொண்டர்கள்  எடுத்துச் செல்ல வேண்டும் என்று பேசினார்.

 

Categories

Tech |