ஜெர்மனியில் பெரும் வெள்ளத்தால் உயிரிழந்த மக்களை காப்பாற்றுவதில் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடர ஜெர்மனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் ஜெர்மனியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் 150 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அந்த பெரும் வெள்ளத்தில் அதிகாரிகள் மக்களை எச்சரிப்பதற்காக ஏதேனும் நடவடிக்கை எடுத்தார்களா என்பது குறித்த கேள்வி எழுந்து வந்தது. இந்த நிலையில் ஜெர்மனியின் அரசு வழக்கறிஞர் அலுவலகம் அந்த பெரும் வெள்ளத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதில் அதிகாரிகள் தோல்வி அல்லது தாமதபடுத்தியதால் மக்கள் மரணித்துள்ளார்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை அதிகாரிகள் மீது பதிவு செய்யலாமா என ஆலோசித்து வருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் பெடரல் மற்றும் மாகாண அதிகாரிகள் அந்த பெரும் வெள்ளத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என புகார்கள் எழுந்துள்ள நிலையில் அவர்களுக்கும் இதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.