சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு, தன் 169-வது திரைப்படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தின் 169-வது திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் பற்றிய தகவல்கள் சீக்கிரம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, இத்திரைப்படத்தில், ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகளுக்கான தேர்வுக்கு பின் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க நிறைய வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம், ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.
எனவே ரஜினிகாந்த், அவரை நேரடியாக வரவழைத்து, பாராட்டுக்களை தெரிவித்தார். அப்போது தேசிங்கு பெரியசாமி ரஜினிகாந்திடம் புதிய கதை ஒன்றை கூறியிருக்கிறார். அந்த கதை ரஜினிக்கு பிடித்துவிட்டது. எனவே இத்திரைப்படத்தில் நடிக்க அவர் அதிக ஆர்வத்துடன் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.