Categories
ஆன்மிகம் இந்து

வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெருக்கும் ஆடிப்பெருக்கு… வீட்டிலிருந்தே கொண்டாடலாம்…!!!

ஆடிப்பெருக்கு என்பதை நதியை கொண்டாடும் விழா. இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு இன்று கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பெருக்கு அன்று நதிகளை வழிபட்டால் நீர் வளம் பெருகும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. மேலும் திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெருகவும், திருமணமாகாத பெண்கள் மனதிற்கு பிடித்த கணவரை மணக்கவும், காவிரி தாயை வழிபடுகின்றோம். இந்த ஆடிப்பெருக்கன்று நாம் புத்தாடை அணிந்து, சக்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர்சாதம் முதலான பதார்த்தங்களை எடுத்துச் சென்று நதிக்கரையில் அமர்ந்து நதிகளை தாயாக கருதி பூஜித்து விருந்துண்டு மகிழ்வது வழக்கம்.

தொற்று காரணமாக பல நதிக்கரைக்கு செல்ல முடியாத காரணத்தினால் நாம் இந்த ஆடிப்பெருக்கை வீட்டிலிருந்தே பூஜை செய்து கொண்டாடலாம். வீட்டில் பூஜை செய்ய ஒரு இடத்தை தேர்வு செய்து கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வழிபடலாம். அதோடு ஒரு தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு தேங்காய் பூ பழம் துணி உள்ளிட்டவை வைத்து தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி குல தெய்வத்தையும் சூரிய பகவானையும் வணங்க வேண்டும். வீட்டின் பூஜை அறையில் ஒரு செம்பில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சள் தூள் போட்டு நிவேதனம் வைத்து ஏழு புனித நதிகளின் பெயரை கூறி வழங்கினால் போதுமானது.

Categories

Tech |