டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் குண்டு எறிதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் தூர் தோல்வியடைந்தார் .
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான குண்டு எறிதல் தகுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் குரூப் ‘ஏ ‘பிரிவில் இடம் பிடித்தவர்களுக்கு நடந்த தகுதிச்சுற்று போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றனர். இரண்டு குரூப்பிலும் சேர்த்து முதல் 12 இடங்கள் பிடிக்கும் வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.
இதில் ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா 3 வாய்ப்புகள் கொடுக்கப்படும். இதில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் தனது முதல் வாய்ப்பில் 19.99 மீட்டர் தூரம் குண்டு எறிந்தார் .ஆனால் 2-வது மற்றும் 3-வது வாய்ப்புகள் பவுல் ஆனது .இதனால் அவர் 13-வது இடத்தைப் பிடித்து தோல்வியடைந்ததால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.