ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோசமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முயன்றபோது அது என்னால் முடியவில்லை என்றும் கூறியிருந்தார். அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை எனவே அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இதையடுத்து கடந்த 15ஆம் தேதி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்பது பற்றி வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதை தொடர்ந்து ஃபரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் விளக்கம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.