நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அனைவரும் வெளியே வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை புதுப்பிப்பது சிக்கல் உண்டானது. அதனால் வாடிக்கையாளர் களின் நலனுக்காக ஆன்லைன் சேவைகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஆண்டு ஏற்படுத்தியது. இந்த புதிய வசதியின் மூலமாக வாடிக்கையாளர்கள் அனைவரும் வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலமாகவே பெற்றுக்கொள்ள முடியும்.
அதிலும் குறிப்பாக புதிய டிரைவிங் லைசென்ஸ் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக, டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதற்கு நேரடியாகச் சென்று தேர்வில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை. ஆதார் இருந்தால் மட்டுமே போதும். ஆன்லைன் மூலமாகவே லைசென்ஸ் வாங்கி கொள்ள முடியும். இந்த புதிய வசதியின் படி நீங்கள் ஆர்டிஓ அலுவலகம் தொடர்பான 18 வகையான சேவைகளை ஆன்லைன் மூலமாக பெறலாம்.
அதற்கு முதலில் https://parivahan.gov.in/sarathiservice/newLLDet என்ற முகவரியில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த வெப்சைட்டில் உள்ள Drivers/ Learners License என்ற வசதியின் கீழ் உள்ள more என்ற பட்டனை கிளிக் செய்தால் நிறைய ஆப்சன்கள் வரும். அதில் முதலாவதாக உள்ள Apply for Learner Licence என்ற வசதியில் உள்நுழைந்தால் நபரின் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யும்படி கேட்கப்படும். அவற்றை நிரப்பு submit கொடுக்க வேண்டும். ஒருவேளை LLR ஏற்கெனவே இருந்தால் அந்த LLR நம்பரை வைத்தும் டிரைவிங் லைசன்ஸ் ஈசியாக வாங்கிவிடலாம்.