Categories
Uncategorized சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – பார்லி மசாலா சாதம்

பார்லி மசாலா சாதம்

தேவையான  பொருட்கள் :

பார்லி –  100  கிராம்

பீன்ஸ் –  100 கிராம்

வெங்காயம்  –  2

தக்காளி –  2

பட்டை  –  1

கிராம்பு –  1

கரம் மசாலாத்தூள் –  1  டீஸ்பூன்

மிளகாய்த்தூள் –  1 டீஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது –  1 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

பார்லி மசாலா சாதம்க்கான பட முடிவுகள்

செய்முறை:

முதலில் பார்லி மற்றும்  பீன்ஸை நன்கு ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, இஞ்சி- பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம்  , தக்காளி சேர்த்து வதக்கியதும், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு , வேக வைத்த பார்லி, பீன்ஸை சேர்த்து நன்றாக  கிளறி இறக்கினால் சுவையான பார்லி மசாலா சாதம்  தயார் !!!

Categories

Tech |