தர்ஷன், லாஸ்லியா இணைந்து நடித்துள்ள கூகுள் குட்டப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தர்ஷன். தற்போது இவர் தமிழ் சினிமாவில் ‘கூகுள் குட்டப்பா’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். சபரி, சரவணன் இருவரும் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Here’s the first look of #KoogleKuttapa my wishes to one of the coolest and respected @ksravikumardir sir @Sabari_gireesn @gurusaravanan @TharshanShant #Losliya @iYogiBabu @Prankster_Ragul @GhibranOfficial @editorpraveen @twitavvi @Kavitha_Stylist @proyuvraaj pic.twitter.com/KZXYIizfEO
— Suriya Sivakumar (@Suriya_offl) August 3, 2021
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்நிலையில் கூகுள் குட்டப்பா படத்தின் கலக்கலான பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.