Categories
தேனி மாவட்ட செய்திகள்

எல்லாரும் விட்டுட்டு போய்ட்டாங்க… குழந்தைகளை பிரிந்ததால் சோகம்… ஊராட்சி மன்ற செயலாளர் பலி…!!

தேனி மாவட்டத்தில் மனைவி மற்றும் குழந்தைகள் விட்டு சென்றதால் ஊராட்சி மன்ற செயலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள டி.வாடிபட்டியில் பாலகிருஷ்ணன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டி.வாடிபட்டியில் ஊராட்சி மன்ற அலுவலக செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும்(37) இடையே அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு கணவன் மனைவி இருவரும் பிரிந்துள்ளனர்.

இதனையடுத்து பாலகிருஷ்ணன் அவரது மகன் கார்த்திக்(7) மற்றும் மகள் காவியா(5) இருவரையும் பார்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் மீண்டும் லட்சுமி வீட்டிற்கு வந்து குழந்தைகளை அழைத்து சென்றுள்ளார். மேலும் பாலகிருஷ்ணன் மனைவியை வீட்டிற்கு அழைத்தும் அவர் வரவில்லை. இந்நிலையில் மனைவி விட்டு சென்ற சோகத்தில் இருந்த பாலகிருஷ்ணனுக்கு தற்போது குழந்தைகளும் சென்றதால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கருப்பசாமி கோவிலில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |