Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புளியோதரை மிக்ஸ் செய்வது எப்படி !!!

புளியோதரை மிக்ஸ்

தேவையான பொருள்கள் :

புளி – எலுமிச்சை அளவு

உப்பு –  தேவைக்கேற்ப

வறுத்து அரைக்க:

கடலைப்பருப்பு -1 டேபிள் ஸ்பூன்

தனியா -1 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

மிளகு –  1 டீஸ்பூன்

எள் –  1 டேபிள் ஸ்பூன்

வரமிளகாய் –  20

தாளிக்க :

நல்லெண்ணெய் –  5 டேபிள் ஸ்பூன்

உளுந்தம்பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1/2  டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

நிலக்கடலை – 1/2  கப்

வரமிளகாய் – 6

பெருங்காயத்தூள் – சிறிது

மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்

கருவேப்பிலை –  சிறிதளவு

புளியோதரை மிக்ஸ்க்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் ஒரு கடாயில் வறுத்து அரைக்க கொடுத்த பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு , பின் கெட்டியான புளிக்கரைசல்  ,  உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும் . இதில் பின்னர் அரைத்த பொடியை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும் . இந்த கலவையை எண்ணெய் தெளிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான புளியோதரை மிக்ஸ் தயார் !!!

Categories

Tech |