சிவகார்த்திகேயன் தனது இரண்டாவது ஆண் குழந்தைக்கு பெயர் சுட்டியதை மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவியின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்பொழுது இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நற்செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர் தனது மகனை முதன் முதலில் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும் அவருக்கு பிறந்துள்ள ஆண் குழந்தைக்கு ‘குகன் தாஸ்’ என்று பெயர் சூட்டியதை மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.