சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கட்டபொம்மன் நகர் பகுதியில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சில பேர் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் சங்கர், நடராஜன், கல்கி, ராமமூர்த்தி, செந்தில்குமார் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சேவலை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.